Posts

மருத்துவமனை சுவர்களுக்குள் நிகழும் மர்மங்கள் — குழந்தை உயிரிழப்பின் உண்மையான குற்றவாளி யார்?

ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்கிறது என்றால் அது அந்த குடும்பத்திற்கு புதிய கதிரவன் உதயமானது போல. அந்த சிரிப்பு, அந்த மகிழ்ச்சி… நெகிழ்ச்சியான தருணம் அது . ஆனால், திடீரென அந்த மகிழ்ச்சியின் இடத்தை கருப்பு மேகம் சூழ்ந்தால்? இதற்கு நிறைய சான்றுகள் இருந்தாலும் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, திருநெல்வேலியில் நடந்த ஒரு சம்பவம் இன்று கூட மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. மருத்துவர்கள் இல்லாமல், செவிலியர்கள் மட்டும் பிரசவத்தை கவனித்தனர். முடிவில் — 26 வயது அகிலா என்ற தாயும், வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர். அந்த நாளின் துயரம், அந்த மறக்க முடியாத கண்ணீர், இப்போது கூட பேசப்படுகிறது. ஆனால் கேள்வி முக்கியம்… இந்த மரணத்திற்கு காரணம் யார்? மருத்துவர்க ளின் தவறா ? அல்லது தாயின் உடல்நிலை பிரச்சனையா? இது போன்ற சம்பவங்கள் இன்னும் எத்தனை நடந்துகொண்டிருக்கின்றன? எதனால், குழந்தைகள் பிறக்கும் தருணத்தில் உயிரிழக்கின்றனர்? இதற்கான பதில் எளிதில் கிடை க்காது … ஆனால் தடயவியல் நிபுணர்கள் ( Forensic Experts ) இந்த மறைந்த உண்மையை வெளிக்கொணர, நுண்ணறிவோடு சில சோதனைகள் மேற்கொ ண்டு உண்மையை வெளிக்க...